Trending News

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டமானது நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதை மக்களின் வரவு செலவுத் திட்டமாக மாற்றும் எதிர்பார்ப்புடன், பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக தொழில் வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள், தனிநபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமது அபிப்ராயங்களை தெரிவிக்க முடியுமெனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, வரவு செலவுத்திட்டம் தொடர்பான அபிப்பிராயங்களை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பணிப்பாளர் நாயகம்,
வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம்
நிதியமைச்சு, மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
பொதுசெயலாளர் அலுவலகம் – கொழும்பு- 01

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை Prasangika.hg@tipd.treasury.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

Election Commission to meet party secretaries today

Mohamed Dilsad

Sadaf Khadem: Iranian female boxer halts return over arrest fears

Mohamed Dilsad

Leave a Comment