Trending News

பிரபல சீன நடிகை “பேன் பிங்டாங்” கைது

(UTV|CHINA)-பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார்.

இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது.

இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மவுனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர்.

இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka grouped with NZ, India and Japan for U19 World Cup

Mohamed Dilsad

මුව ආවරණ පළඳින්න – සෞඛ්‍ය අමාත්‍යාංශයෙන් දැනුම් දීමක්

Editor O

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

Mohamed Dilsad

Leave a Comment