Trending News

நம்பிக்கையில்லா பிரேரணயின் போது வாக்களித்த SLFP உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சம்பந்தமாக அடுத்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்காக கூட்டிணைந்தது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவின் தீர்மானத்தின் படியே என்றும் இதன் காரணமாக இந்த உறுப்பினர்கள் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை அடுத்த வாரம் எடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் சமர்பிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பலத்த சூறாவளி வீசக்கூடும்

Mohamed Dilsad

කවුරු මොනව කිව්වත් ජනාධිපතිවරණය ඔක්තෝබර් 17 ට පෙර පවත්වනවා – ඇමති බන්දුල

Editor O

මහජන නියෝජිතයින්ගේ ආරක්ෂාව තහවුරු කරන්න – නාමල් රාජපක්ෂ

Editor O

Leave a Comment