Trending News

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து ஷாசியா ஷாகித் என்பவரின் தலைமையில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இன்று முதல் 28ம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். இந்த மாணவர்கள் இலங்கையிலுள்ள பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்றாஸ் அஹமத்கான் சிப்றாவையும் சந்தித்தனர்.

இந்த நிகழ்வு இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நிலையத்தில் இடம்பெற்றது.

இவர்கள் கண்டி மற்றும் காலி பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்…

Mohamed Dilsad

அதிவேக நெடுஞ்சாலையின் பேரூந்து கட்டணமானது நள்ளிரவு முதல் குறைவு

Mohamed Dilsad

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment