Trending News

போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – போயிங் 737 மெக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பு தற்காலிகமாக ஜனவரி மாதம் வரை இடைறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.

இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக அப்போது கூறப்பட்டிருந்தது.

வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

Mohamed Dilsad

Elpitiya Pradeshiya Sabha Elections on Oct. 11

Mohamed Dilsad

India MP Shashi Tharoor charged over wife’s death

Mohamed Dilsad

Leave a Comment