Trending News

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – கடும் மழையின் காரணமாக மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு 84 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மின் சக்தி மற்றும் எரிசத்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதற்கு அமைவாக காசல்ரி நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 94.06 சதவீதமாகவும், மவுஷாகெலே நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 91 சதவீதமாகவும், கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 86.08 சதவீதமாகவும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 80.01 சதவீதமாகவும், ரன்தெனிகல நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 53.04 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

சமநலவேவ நிர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர் மூலமான மின் உற்பத்தி 45 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Limited persons allowed to enter polling stations – Elections Commission

Mohamed Dilsad

George RR Martin’s video game leaks

Mohamed Dilsad

மின் விநியோகத்தில் தடை…

Mohamed Dilsad

Leave a Comment