Trending News

அனைத்து மாகாண ஆளுனர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.புதிய அரசின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிக்க இடமளித்து, இவ்வாறு ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதேவேளை, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

SC issues order against dumping garbage in Muthurajawela

Mohamed Dilsad

President calls urgent Cabinet meeting

Mohamed Dilsad

Leave a Comment