Trending News

இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியா பிரதமர்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நேற்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இத்துடன்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

புகையிரத சேவைகளில் தாமதம்…

Mohamed Dilsad

Sri Lankan president, PM congratulate Hasina

Mohamed Dilsad

PTL suspension extended

Mohamed Dilsad

Leave a Comment