Trending News

சுனாமி – சூறாவளி வதந்நிகளே – இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா

(UTV|COLOMBO)-சுனாமி மற்றும் சூறாவளி ஏற்படபோவதாக சில வதந்நிகள் இடம்பெற்றுள்ளன இவை அனைத்தும் உண்மைக்குபுறம்பானவையாகும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அனர்த்தம் ஏற்படுமாயின் அது தொடர்பாக முன்கூட்டியே பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று இடம் பெற்ற சீரற்றகாலநிலையினால் பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இதே போன்று பெருந்தெருக்களிலும் வீதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை அகற்ற நேற்று இரவு முதல் நடவடிக்கை மேற்கொண்டோம்.
தாழமுக்கம் காரணமாக தற்போதைய சீரற்ற நிலமை ஏற்பட்டுள்ளது  மழையுடன் காற்றும் வீசியது இது குறித்த முன் அறிவிப்புக்களை நாங்கள் விடுத்திருந்தோம் என்றும் அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொழும்பில் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டு

Mohamed Dilsad

ஶ்ரீ.ல.சு.க மறுசீரமைப்பு ஜனவரியில்

Mohamed Dilsad

CID யின் பிரதி பொலிஸ்மா அதிபராக நுவன் வேதசிங்க நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment