Trending News

செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய், அஜித்

(UTVNEWS | COLOMBO) – இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், தனுஷ் உள்பட 8 தமிழக பிரபலங்கள் இடம்பிடித்து உள்ளனர்.

வருடம் தோறும் அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ், சிறுத்தை சிவா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இந்த பட்டியலில் ரஜினி 13ஆவது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான் 16ஆவது இடத்திலும், விஜய் 47ஆவது இடத்திலும், அஜித் 52ஆவது இடத்திலும், ஷங்கர் 55ஆவது இடத்திலும், கமல்ஹாசன் 56ஆவது இடத்திலும், தனுஷ் 64ஆவது இடத்திலும், சிறுத்தை சிவா 80ஆவது இடத்திலும் உள்ளனர். கடந்த முறை தென்னிந்தியாவில் 15 நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை 13 பேர் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

Mohamed Dilsad

ஜெனிவாவின் பரிந்துரைகளை அமடுல்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

SLFP – SLPP discussions postponed

Mohamed Dilsad

Leave a Comment