Trending News

நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணிக்கு நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதுளை-கந்தகெடிய பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் 57.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Five new Envoys present credentials to President

Mohamed Dilsad

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

Mohamed Dilsad

බන්දුල ගුණවර්ධන දේශපාලනයට සමුදෙයි ද ?

Editor O

Leave a Comment