Trending News

50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை…

(UTV|COLOMBO) சீகிரியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திச் சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வாகன தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறு அதிகரித்த விலையில் தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தனியார் விற்பனை நிலையங்களில் குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து ஆராய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சீகிரிய திட்ட முகமையாளர் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

Mohamed Dilsad

காலி மாவட்டம் – ஹபராதுவ தேர்தல் தொகுதி

Mohamed Dilsad

මැතිවරණ නීති උල්ලංඝනය කිරීම් ගැන පැමිණිලි 125ක්

Editor O

Leave a Comment