Trending News

பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ககூடும்  என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

Related posts

වාහන මිලට ගැනීම අධෛර්යමත් කිරීමට මහ බැංකුවෙන් නව කොන්දේසි..

Editor O

Canada provides humanitarian support to ongoing relief efforts in Sri Lanka

Mohamed Dilsad

ரஷியா தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பெண்கள் பலி

Mohamed Dilsad

Leave a Comment