Trending News

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடையதென கூறப்படும் கார் ஒன்று பாதுக்கை, போரகெதர பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இன்று(09) காலை குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

அந்த காரை சோதனை செய்த போது எவ்வித அனுமதிப் பத்திரங்களும் இல்லை என்பதுடன், அனுமதிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் காரை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கார் ஏதாவது குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

Related posts

Rouhani rues impact of US sanctions

Mohamed Dilsad

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

Mohamed Dilsad

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து வெற்றி!

Mohamed Dilsad

Leave a Comment