Trending News

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-பலாங்கொட பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரை இம்மாதம் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு பலாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று பலாங்கொட நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபரின் மனநலம் குறித்து பரிசோதித்து வைத்திய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி பலாங்கொட பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

 

Related posts

இரு நாட்டு தலைவர்களிடையிலான சந்திப்பு

Mohamed Dilsad

Madras High Court adjourns Rajiv Gandhi killer Murugan’s plea to meet his mother

Mohamed Dilsad

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

Mohamed Dilsad

Leave a Comment