Trending News

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் தரப்பு தகல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பாராளுமன்ற  உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நாளை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலும் பாராளுமன்றத்தில்  செயற்படும் விதம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

18-Hour water cut in Colombo suburbs

Mohamed Dilsad

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

Mohamed Dilsad

கிளிநொச்சி வெள்ள நிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

Mohamed Dilsad

Leave a Comment