Trending News

காதல் கணவர் இரண்டாவது திருமணம்:கதறி அழுத பிரபல நடிகை!!

(UDHAYAM, INDIA) – காதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால் நடிகை ஒருவர் கதறி அழுததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பெரிய நட்சத்திரத்தின் பெயரை கொண்ட இயக்குனர், நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தன்னுடைய படங்களில் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், திருமணத்திற்கு பிறகு அந்த நடிகையை நடிக்கக்கூடாது என்று வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், நடிகையோ தான் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் இருவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, இரண்டு பேரும் பரஸ்பரம் விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், விவகாரத்து பெற்ற அந்த இயக்குனர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம்.

படப்பிடிப்பு தளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நடிகைக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

செய்தியை கேள்விப்பட்ட உடனேயே கேரவனுக்குள் ஓடிச்சென்று கதவை சாத்திக் கொண்டு கதறி அழுதாராம்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் நடிகைக்கு என்ன ஆனது? என்று பதறிப்போனார்களாம்.

அவர் எதற்காக அழுகிறார் என்ற விவரங்களும் தெரியாமல் பதற்றத்துடன் இருந்தார்களாம்.

பின்னர், சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நடிகை, வீங்கிய கண்களுடன் உடனடியாக காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு விட்டாராம்.

Related posts

ජනාධිපතිවරණයට 36 දෙනෙකු ඇප තැන්පත් කරයි.

Editor O

All chainsaw machines must register before Feb. 28

Mohamed Dilsad

விஜயகலாவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேர்வின் கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment