Trending News

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ஆராய ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்கள் என 13 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 13 ஆம் திகதி பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி வரை குறித்த வர்த்தமானி அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதற்கமைய மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வங்கியில் கொள்ளை: வாடிக்கையாளருக்கு துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

ட்விட்டர் கணக்குகளை முடக்க தீர்மானம்

Mohamed Dilsad

Honduras candidate rejects poll count

Mohamed Dilsad

Leave a Comment