Trending News

பெற்றோல் விலை அதிகரிப்பை அடுத்து முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு

(UTV|COLOMBO) பெற்றோல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயத்தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது. இதன்படி புதிய கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கும் என்று, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.

அதேபோன்று, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கமும், கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது.

Related posts

Macao relaxes travel alert on Sri Lanka

Mohamed Dilsad

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

Mohamed Dilsad

பணத்திற்காக தாயின் சடலத்தை கோரிய மகன்!!

Mohamed Dilsad

Leave a Comment