Trending News

தனது தலைமுடியை டிராகன் ஸ்டைலில் கத்தரித்த அமைரா தஸ்துர்

(UTV|INDIA)-தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்துர். அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தி படங்களிலும் நடிக்கிறார். புதிய படமொன்றில் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக நடிக்கிறார். இதற்காக அவர் முடிவெட்டுவதற்கு ஹேர்ஸ்டைலிஸ்ட்டான அழகு நிபுணர் ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டார். அத்துடன் அழகு நிபுணர் தனது தலைமுடியை டிராகன் ஸ்டைலில் கத்தரித்து வைத்திருந்ததை கவனித்த அமைரா, அதேபோல் தனது ஹேர்ஸ்டைலையும் மாற்றும்படி கேட்டார்.

அதை ஏற்று அவருக்கு டிராகன் கட் வைத்து தலைமுடியை கத்தரித்துவிட்டார். இதுபற்றி அமைரா கூறும்போது,’பட கதாபாத்திரத்துக்காக ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவரிடம் தலை முடியை ஸ்டைலாக கட் செய்வதற்கு 3 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

தற்போது என்னால் கர்லிங், ஸ்டிரைட்னிங் போன்ற பலவித ஹேர் ஸ்டைலை யாருக்கு வேண்டுமானாலும் செய்யமுடியும். எனது இணைய தள பக்கத்தில் என் படம் சம்பந்தப்பட்ட விவரங்கள் பற்றியே பகிர்ந்து வந்தேன். இனி அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மெசேஜ் பகிர உள்ளேன். பிரபல நடிகர் ஒருவரின் அட்வைஸ் ஏற்று இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ என்றார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

Mohamed Dilsad

හම්බන්තොට ලුණු ලේවායෙන් පසුගිය මාස හයේ ලුණු කැටයක්වත් නිෂ්පාදනය කර නැහැ.

Editor O

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment