Trending News

சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல் – விதிக்கப்பட்ட தடை குறித்து பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் ,

சமூக இணையத்தள இடையூறுகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குவில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

பேஸ்புக் ,வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஓழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்…

Mohamed Dilsad

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

African Union Urges Congo to Suspend Final Election Results

Mohamed Dilsad

Leave a Comment