(UTV|SYRIA)-சிரியாவில் மோதல் தவிர்ப்பை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, கிழக்கு கோட்டா பிராந்திய பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
30 நாட்களுக்கு மோதல் தவிர்ப்பை அறிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும் இந்த தீர்மானத்துக்கு மத்தியிலும் சிரிய படையினரும், ரஷ்ய படையினரும் தொடர்ந்தும் கிழக்கு கோட்டா பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்த பட்சம் 5 பொதுமக்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு மேலாக சிரிய படையினர் இந்த பகுதியில் குண்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றநிலையில், இதுவரையில் 550க்கும் அதிகமான பொதுமக்கள் அங்கு பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Madonna says White House comments ‘taken out of context’ – [Images]