Trending News

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட  போராட்டம்  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய வீதிமறிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது

இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி பிரதேச செயலர் இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம் எதிர்வரும் புதன்கிழமை  எனக்கும் அரசாங்க அதிபரிற்கும் கடற்படையினரிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற உள்ளது அக் கலந்துரையாடலுக்காக இரணைதீவு சம்பந்தப்பட்ட மேலதிக தரவுகளையும் வழங்க உள்ளோம் அதுவரை  ஒத்துழைக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார் இதற்கமையவே இப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

எனினும்  இரணைதீவு மக்களால்  முன்னெடுக்கப்பட்டுவந்த  தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் இவ் சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கா விடின் போராட்டம் வேறு வடிவத்திற்கு மாறும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

Special HC to hear Case against GOTA daily

Mohamed Dilsad

North Korea ‘Unlikely to abandon nukes’

Mohamed Dilsad

Anti-Government protests sweep Algeria

Mohamed Dilsad

Leave a Comment