Trending News

வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு

(UDHAYAM, COLOMBO) – வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்க முன்வந்திருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகளை இலகுவாக வழங்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக வெளிநாடுகளில் இருப்போர் தமது நிதிநன்கொடையை வைப்பிலிட சம்பத் வங்கியின் விசேட ஐந்து வைப்பீட்டு கணக்குகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்த கணக்குகளில் தமது நன்கொடை பணத்தை வெளிநாட்டிலிருப்போர் வைப்பீடு செய்யமுடியும். இந்த வங்கிக்கான SWIFT குறியீடு BSAMLKLX என்பதாகும்.

வைப்பீடு செய்வதற்கான கணக்கு இலக்கங்கள்

  1. அமெரிக்க டொலர் (USD) – 5029 6000 2000
  2. ஸ்ரேலிங் பவுன் (GBP) – 5029 6100 2000
  3. ஜப்பான ஜென் (SPY) – 5029 6400 2000
  4. அவுஸ்ரேலிய டொலர் (AUD) – 5029 6600 2000
  5. யூரோக்கள் (EUR) – 5029 6900 2000

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களை புனரமைப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கும் மற்றும் தேவைக்கேற்றவகையில் நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

Related posts

President to hold special discussion on Singapore FTA

Mohamed Dilsad

Showery condition over Sri Lanka expected to reduce

Mohamed Dilsad

Special trains for Poson festival

Mohamed Dilsad

Leave a Comment