Trending News

கூட்டமைப்பின் கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

(UTVNEWS | COLOMBO) – சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம் பேரழிவில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என பாராளுமனற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமனற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை துளசி மண்டபத்தில் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் இரண்டு ஜனாதிபதி தேர்லில் ஒருவர் வெற்றி பெறத்தான் போவார்கள். தமிழ் மக்கள் ஏனைய 33 பேரில் யாருக்கு வாக்களித்தாலும் அல்லது சோம்பல்தனமாக வீட்டில் இருந்தாலும் இரண்டு பேரில் ஒருவர் வெற்றிபெறும் நிலையே உள்ளது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கருத்து கணிப்புகளின் படி தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஸ இலகுவில் வெற்றிபெறுவார் என்பது அனைவரதும் கணிப்பு. அதிகளவில் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று அந்த கணிப்புகள் கூறுகின்றன.

மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் கைகளில் இந்த நாட்டின் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் தீர்மானிக்கின்ற போதிலும் எங்களுக்கு எதுவும் நடப்பதில்லையென்ற நியாயமான கருத்தும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறு சொல்லிவிட்டு அந்த தீர்மானத்தினை மற்றவர்களின் கைகளில் விடுவோமாகவிருந்தால் எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை நாங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

Ex-DIG Anura Senanayake in courts today

Mohamed Dilsad

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

Mohamed Dilsad

Palaniswami writes to Modi again on fishermen issue

Mohamed Dilsad

Leave a Comment