Trending News

கோட்டாபய இலங்கை குடியுரிமையை உறுதி செய்து விட்டார் – சிறிபால டி சில்வா

(UTVNEWS | COLOMBO) –  இந்த நாட்டு மேன் முறையீட்டு நீதிமன்றமே கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை குடியுரிமையை உறுதி செய்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேஸ்புக்கில் இட்ட ஒரு பதிவுக்காக இவர்கள் இவ்வள்வு எதற்காக கொந்தளிக்க வேண்டும் எனவும் அந்த கொந்தளிப்பு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்களில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை பற்றி வௌ;வேறான காரணிகளை உருவாக்கி இன்று நாட்டு மக்களின் மன நிலையை மாற்ற முயற்சிக்கின்றனர்.
சட்டத்தரணி என்ற வகையில் நான் சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் அதிமான ஜனாதிபதி தேர்தல் மனுக்களை தாக்கல் செய்த்தவன் என்ற வகையில் சொல்கின்றேன்.

இன்று என்ன நடந்துள்ளது. அவருக்கு குடியுரிமை இல்லை என்றால் அவருக்கு குடியுரிமை இல்லை என அவருக்கு எதிரான எதிர்ப்பு மனு ஒன்றை தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்வைக்க வேண்டும். அந்த எதிர்ப்பை முன்வைத்து அதன் பின்னர் உயர் னீஹிமன்றம் அது பற்றி ஒரு தீர்ப்பை கொடுக்க வேண்டும்.
அப்படியான எதையும் செய்யவில்லை. இதுவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் மிக தெளிவாக அவரின் குடியுரிமை பற்றி தெளிவான தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

Related posts

இந்தியாவில் லசித் மாலிங்கவிற்கு கிடைத்துள்ள கௌரவம் -[VIDEO]

Mohamed Dilsad

பரவும் தூசு துகள்களினால் மனித வாழ்க்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

Mohamed Dilsad

I will not contest the SLC election – Thilanga Sumathipala

Mohamed Dilsad

Leave a Comment