Trending News

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

(UTVNEWS|COLOMBO ) – சட்டவிரோதமாக தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த 6 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேன தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ 60 கிராம் தங்கத்துடன் 4 இந்தியர்கள் முதலில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பின்னர், ஒரு கிலோ 370 கிராம் தங்கத்துடன் இரண்டு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் சுமார் 17 மில்லியன் ரூபா பெறுமதியானது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களிடம் விசாரணைகளை; முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

Mohamed Dilsad

NAITA நிறுவனத்தின் புதிய தலைவராக ஹபீஸ் நசீர்…

Mohamed Dilsad

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment