Trending News

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

(UTV|COLOMBO)-சேனா என்ற படைப் புழுவைப் போன்று நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் ஒன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாவல் நிறத்தையுடைய குறித்த புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை, ​நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

අද ඩොලරය

Editor O

ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் கைது

Mohamed Dilsad

Sri Lankan Rupee hits record low of 170.65

Mohamed Dilsad

Leave a Comment