Trending News

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்து வரும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு இந்த ஆண்டின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு டோனிக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, பங்கஜ் அத்வானி (ஸ்னூக்கர்), ராமச்சந்திரன் நாகசாமி (தொல்லியல் துறை), வேத்பிரகாஷ் நந்தா (இலக்கியம் மற்றும் கல்வி),   லட்சுமண் பை (ஓவியம்), அரவிந்த் பாரிக் மற்றும் சாரதா சின்ஹா ( இசைத்துறை), பிலிபோஸ் மர் கிறிசோஸ்டோம் (ஆன்மிகம்) உள்பட பலருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்

Mohamed Dilsad

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Laffeer elected President of Veterans TT for 19th time

Mohamed Dilsad

Leave a Comment