Trending News

இன்று முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO)  இன்று முதல் ஒருவார காலத்திற்கு உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி எதிர்வரும் 26 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கு இணையாக நாட்டில் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் அமுல்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது மற்றும் சகல பிரஜைகளையும் அதற்காக ஒன்றிணையச் செய்வது அதன் முக்கிய நோக்கமாகும்.

இதன்படி 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் போதையிலிருந்து விடுதலை பெறுவது குறித்து தெளிவுப்படுத்தல், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெளிப்படுத்துதல், புனருத்தாபனத்தின் பின் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தொடர்பான பின்னணி அறிக்கை உள்ளிட்ட பல செயற்திட்டங்கள் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

Tokyo typhoon cuts power to 900,000 homes

Mohamed Dilsad

Abduction and assault of journalist Keith Noyahr

Mohamed Dilsad

අබ්දුල් අසීස් අල් සෞද් කුමරු ජනපති මුණ ගැසෙයි

Mohamed Dilsad

Leave a Comment