Trending News

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று(25) ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, அரச மருந்தகங்கள் கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இன்று(25) விசாரணைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட் சட்டத்தரணிகள் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 19ம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், குறித்த காலப்பகுதிக்குள் ஆயிரத்து 142 முறைபாடுகள் கிடைத்துள்ளன.

 

 

 

Related posts

Ariya B. Rekawa appointed Uva Province Governor

Mohamed Dilsad

Jana Balaya Colombata’ Protest Ends

Mohamed Dilsad

சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

Leave a Comment