Trending News

UPDATE-ரயில்வே எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) சில கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.

 


ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் சில கோரிக்கைளை முன்வைத்து  சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்; இது வரையில் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாட உள்ளதாக மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

Related posts

Stanley Dias elected Mayor of Dehiwala – Mt. Lavinia

Mohamed Dilsad

PM Modi pays homage to Temple of the Tooth Relic

Mohamed Dilsad

பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பிரதமர் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment