Trending News

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்

(UTV|COLOMBO) அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர்வதற்காக 4 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமைச்சின் உதவிப் பணிப்பாளர் வாசனா பெரேரா தெரிவக்கையில்,  பட்டப் படிப்புக்களைத் தொடர்வதற்கான வட்டியில்லா கடன் பெறுவதற்கு நான்காயிரத்து 500 பேருக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வட்டியில்லா கடன் பெறுவதற்கு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்  என்றார்.

2017ம் ஆண்டுக்குரிய கா.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்று, பொதுப் பரீட்சையில் 30 இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்க முடியும். இந்த கடன் திட்டத்தில் குடும்ப வருமானமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அரசு சாராத பத்து உயர் கல்வி நிறுவனங்களில் அரச அங்கீகாரம் பெற்ற 50 கற்கை நெறிகளை தொடர்வதற்கு கடன் வழங்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

பாதுகாப்பு செயலாளராக துசித வனிசிங்க

Mohamed Dilsad

UPDATE: Kumara Welgama steps out of presidential race

Mohamed Dilsad

Police Media operations to be brought under MCNS

Mohamed Dilsad

Leave a Comment