Trending News

ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எம்.ஜி.ஆர் படம்

(UTV|INDIA)-எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமே‌ஷன் படமாக ஒரு படமும் உருவாகி வருகிறது. என் பேஸ் என்ற அதிநவீன தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 160கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலாநாதன் இருவரும் படம் பற்றி கூறும்போது, ‘இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.

அதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இத்திரைபடத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார். இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது’ என்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

CEB engineers’ strike continues

Mohamed Dilsad

ICC notes pollution concerns after India – Sri Lanka Test

Mohamed Dilsad

UN imposes targeted sanctions on North Korea

Mohamed Dilsad

Leave a Comment