Trending News

வடக்கு கிழக்கு மீள் இணைவு தேவையில்லை – இந்தியா

(UDHAYAM, COLOMBO) – வடக்கு கிழக்கு மீள் இணைவு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெயசங்கர் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் இந்தியா வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய வெளிவிவகார செயலாளர், கால மாற்றத்திற்கு ஏற்ப உருவாகியுள்ள புதிய வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாலத்திற்குக் கீழ் அதிக நீர் நிரம்பியுள்ளது.

தற்போது பல்வேறு புதிய வாய்ப்புக்கள உருவாகியுள்ளன.

குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து, வடகிழக்கு இணைப்பு என்ற ஒரே விடயத்தில் சுழன்றுகொண்டிருப்பது புத்திசாதூரிமானதாக அமையாது என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், வடகிழக்கு இணைப்பு விடயத்தை தமிழ் மக்கள் அரசாங்கத்துடனான பேச்சுவாத்தைகளின்போது உயிர்ப்புடன் செயற்படுவார்களேயானால் இந்தியா அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காது என ஜெயசங்கர் குறிப்பிட்டார்.

Related posts

Marawila five-storied building fire cause Rs. 150 million damage

Mohamed Dilsad

More info comes to light relating to Lasantha’s murder

Mohamed Dilsad

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

Mohamed Dilsad

Leave a Comment