Trending News

ரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்த முயற்சி

(UTV|COLOMBO)-பேஸ்புக் நிறுவனத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் நிலை தொடர்வதாக பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.

Cambridge Analytica தகவல் திரட்டு முறைகேடு விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் Mark Zuckerberg இடம் பகிரங்க விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து வௌியிட்ட Zuckerberg, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சுரண்டலில் ஈடுபடும் ரஷ்ய தரப்பினரின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதிலளித்த சக்கர்பர்க் பேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் பொறுப்பு கூற ​வேண்டியது தன்னுடைய கடப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2016 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட Robert Mueller தலைமையிலான விசேட விசாரணை குழுவினர் பேஸ்புக் ஊழியர்ளுடன் நேர்காணலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தம்மிடம் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையென Zuckerberg தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பகிரங்க விசாரணை மிக நம்பகத்தன்மை வாய்ந்ததெனவும் பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg குறிப்பிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தமது அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மார்க் சக்கர்பர்க் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளார்.

பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

Mohamed Dilsad

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

Mohamed Dilsad

ஏதிலிகள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்…

Mohamed Dilsad

Leave a Comment