Trending News

பிரச்சினைகளைத் தீர்க்க சகல கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றாகப் பாடுபட வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் சமகாலத்தில் உருவாகியுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து பாடுபட வேண்டுமென்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ,சகல இலங்கையர்களும் அரசியல் ரீதியாக பிளவுபடாமல் தேச நலன்கருதி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென பேராயர் கேட்டுக் கொண்டார்.

 

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியல் இழுபறிகளில் ஈடுபடுவதையும். அணிகளாகப் பிரிந்து சென்று பிணக்குகளை ஏற்படுத்துவதையும் நிறுத்த வேண்டும். சகல அரசியல்வாதிகளும் தேசப்பற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென பேராயர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Navy arrests 2 suspect with illegal drugs

Mohamed Dilsad

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Mohamed Dilsad

England showed great character, says Root

Mohamed Dilsad

Leave a Comment