Trending News

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

(UTV|INDIA)-நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் 2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது மணிரத்னத்திடம் கீர்த்தனா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படமொன்றை டைரக்டு செய்ய இருக்கிறார். கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் அக்‌ஷய். விசுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். இவர் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார்.

கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

EU’s top court says UK can unilaterally stop Brexit

Mohamed Dilsad

SLNS Samudura leaves to Pakistan for Naval Exercise ‘Aman’

Mohamed Dilsad

මැතිවරණ දිනයේ නීති විරෝධී ක්‍රියා වාර්තා කරන්න විශේෂ දුරකථන අංක

Editor O

Leave a Comment