Trending News

நாமலுக்கு பிணை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

5 பிரதிவாதிகளில் இரண்டு பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 30 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரூபாய் 30 மில்லியன் பணத்தை முறைக்கேடாக ஈட்டியமை தொடர்பில் நிதி மோசடி சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் மேற்குறிப்பிட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று…

Mohamed Dilsad

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

Mohamed Dilsad

Sri Lanka ready to share expertise with ILO in its efforts in preventing child labour

Mohamed Dilsad

Leave a Comment