Trending News

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை பாராளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஜேர்மன் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயதின்போது ஜேர்மன் அரச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், ஜேர்மன் வெளிநாட்டு இராஜாங்க செயலாளர் வோல்டர் ஜே. லின்டர் மற்றும் ஜேர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இவர்கள் கலந்துரையாடினார்கள்.

இதன் பின்னர் ஜேர்மன் பன்டஸ்டெக் தலைவர் (ஜேர்மனிய பாராளுமன்றம்) நோபட் லேமர்ட் ஏற்பாடு செய்திருந்த பகல் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் – எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

Indian artist Sudarshan Pattnaik to create longest sand Buddha in Sri Lanka

Mohamed Dilsad

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

Mohamed Dilsad

“LANKAN APPARELS SHOULD SOURCE MORE FROM SAARC”

Mohamed Dilsad

Leave a Comment