Trending News

இரா.சம்பந்தனுக்கு வீடு?

(UTVNEWS | COLOMBO) –முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தங்கியிருக்கும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை பயன்படுத்த கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அந்தவகையில் கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள பி 12 இல் இருக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பை அவருக்கு வழங்க கடந்த அரசாங்கம் அமைச்சரவை முடிவு செய்தது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வசித்துவரும் இல்லம் குறித்து தற்போது கேள்வியெழுந்துள்ளது.

Related posts

Dutch youth killed in accident in Sri Lanka

Mohamed Dilsad

சிறையில் வாடும் ஞானசார தேரருக்கான விதிமுறைகள்!!

Mohamed Dilsad

Sri Lanka beat South Africa, 5th ODI as it happened [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment