Trending News

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டு, துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், இன்று (25) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனுர குமார தனது வாக்கினை பதிவு செய்தார்

Mohamed Dilsad

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Mohamed Dilsad

UPDATE-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment