Trending News

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|COLOMBO) – நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 18 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 9-ம் திகதி வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று திடீரென வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மீட்புப் பணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரமான தீக்காயங்களுடன் 40-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில், தீக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Chief Justice summoned before COPE

Mohamed Dilsad

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

Mohamed Dilsad

Premier meets Singapore Ministers

Mohamed Dilsad

Leave a Comment