Trending News

சஜித்திற்கு எதிர்கட்சித் தலைமையினை கோரி மீண்டும் கடிதம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை குறித்த கட்சியின் தலைமைக்கு நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றினை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட கடிதமானது நேற்றையதினம் (27) தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறும் குறித்த 57 உறுப்பினர்களும் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Ireland and Ulster wing Tommy Bowe to retire at end of season

Mohamed Dilsad

Supreme Court rejects C.V. Vigneswaran’s petition

Mohamed Dilsad

Italian avalanche rescuers race to find Rigopiano hotel survivors

Mohamed Dilsad

Leave a Comment