Trending News

நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

குறிப்பாக இலகு கடன் வழங்கப்படுவதாகத் தெரிவித்து பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், குறித்த கடனை வழங்குவதாகக் கூறி மக்களைச் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய வழியில் அணுகுகின்றவர்களிடம் , மக்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வங்கிக் கணக்கு விபரங்கள் கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

Mohamed Dilsad

Amendments to be introduced to give Tax concessions for artistes

Mohamed Dilsad

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment