Trending News

2019 அரச விருது விழாவில் நான்கு விருதுகளை தன்வசப்படுத்தியது UTV தொலைக்காட்சி [VIDEO]

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது விழாவில் UTV தொலைக்காட்சி நான்கு விருதுகளை தன்வசப்படுத்தியது.

2019 தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா கொழும்பு நெலும் பொக்குன நேற்று நடைபெற்றது.

சிறந்த நிகழ்ச்சி முன்னோட்டத்துக்காக நிகழ்ச்சி தயாரிப்பாளர் தொகுப்பாளருமான மஹ்சூக் அப்துல் ரஹ்மான் “மக்கள் நம் பக்கம்” நிகழ்ச்சிக்காகவும் சிறந்த ஆவண நிகழ்ச்சியாக SPORTS.LK நிகழ்ச்சிக்காகவும் இரண்டு விருதுகளை பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான எம்.எல் பிஷ்ரின் மொஹமட் சிறந்த சிறுவர் நிகழ்ச்சிக்கான விருதையும் “மக்கள் நம் பக்கம்” நிகழ்ச்சிக்காக விசேட ஜூரி விருதையும் பெற்றுக் கொண்டார்.

இந்த விருது விழாவுக்காக எட்டு நிகழ்ச்சிகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் அஜித்குமாரின் ‘இளையராஜா இசைநிகழ்ச்சி’, தயாரிப்பாளர் ரினோசா வின் ஒரு துளி நிகழ்ச்சி, செம்மையாக்குனர் பிரகதீஷ் ராஜேந்திரம்; ‘BOOM BOOM SPORTS’ நிகழ்ச்சி முன்னோட்டமும், தயாரிப்பாளர் அப்துல் ரஹ்மானின் “SPORTS.LK” “மக்கள் நம்பக்கம்” நிகழ்ச்சி முன்னோட்டம், ‘BOOM BOOM SPORTS‘ நிகழ்ச்சி, தயாரிப்பாளர் பிஸ்ரின் மொஹமட்டின் ‘சிறுவர் நிகழ்ச்சி’ ‘மக்கள் நம் பக்கம்’ ஆகியன பரிந்துரைக்கப்பட்ட நிலையில் நான்கு விருதுகளை UTV பெற்றுக் கொண்டது.

குறுகிய கால பயணத்தில் நான்கு விருதுகளை பெற்று எமது UTV சாதனை வெற்றியை ஈட்டியுள்ளது. எங்கள் வெற்றிக்கு பூரண ஆதரவு வழங்கிய நேயர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related posts

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Mohamed Dilsad

ஈரான் சண்டையிட விரும்பினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்

Mohamed Dilsad

රාජිත සේනාරත්න රිමාන්ඩ්

Editor O

Leave a Comment