Trending News

உரத்தை இலவசமாக வழங்கி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை மாத்திரமே அதிகரிக்க முடியும்

(UTV|COLOMBO) – விவசாயத்துக்கான உரத்தை இலவசமாக வழங்கப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறிவருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“.. தமது கொள்கையின்படி இரசாயன உரம் மற்றும் மருந்துகள் பயன்படுத்துவது சரியான மார்க்கம் அல்ல. எனவே தாம் அதற்கு முற்றிலும் எதிரானவன். இந்நிலையில் உரத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை மாத்திரமே அதிகரிக்க முடியும். அப்படி என்றால், உரத்தை இலவசமாக கொடுப்பதை விடுத்து சிறுநீரகங்களை நாட்டுக்கு கொண்டு வரமுடியும்…” என ஜனாதிபதி குறிப்பட்டுள்ளார்.

Related posts

Prevailing rainy condition to continue

Mohamed Dilsad

சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்

Mohamed Dilsad

VIP Assassination Plot: Former DIG Nalaka de Silva Appear before the CID again tomorrow?

Mohamed Dilsad

Leave a Comment