Trending News

இலங்கையின் பாதுகாப்பு: குமார் சங்கக்கார கருத்து

(UTVNEWS | COLOMBO) – சர்வதேச உலகக் கிண்ண டெஸ்ட் தொடருக்கான முக்கியமான போட்டி அடுத்தாண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந் நிலையிலேயே இலங்கைக்கான இங்கிலாந்தின் சுற்றுப் பயண பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,இலங்கையின் பாதுகாப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க எதிர்பார்க்கிறோம்.

கிரிக்கெட்டைப் பார்க்கவும் நாட்டை ரசிக்கவும் பலர் இலங்கைக்கு வருவதால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

எதிர்வரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Meghan Markle’s awkward hug moment

Mohamed Dilsad

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு – கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்

Mohamed Dilsad

கிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம்

Mohamed Dilsad

Leave a Comment