Trending News

ஹக்கீம் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் விசேட செவ்வி [VIDEO]

(UTVNEWS COLOMBO) – அமைச்சர் ரவூப் ஹக்கீமை பொய்யனாக மக்கள் கருத வேண்டும் என ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

எமக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “நான் எந்த வகையிலான பச்சோந்தி எவ்வாறான காட்டிக் கொடுப்புக்களை செய்தேன், எந்த வகையில் இந்த சமூகத்துக்கு துரோகம் செய்தேனா? போன்ற விடங்கள் தொடர்பாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு நான் அழைப்பு விடுததிருந்தேன் ஏழு நாட்கள் கால கேடு விடுத்திருந்தேன்.

ஆனால் நேற்று இரவுடன் ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ளது. அவர் எனது வேண்டுகோளை ஏற்கவும் இல்லை அறிக்கை விடவும் இல்லை இதன் மூலம் அவர் என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் வெறும் பொய்களை மக்கள் மத்தியில் அமைச்சர் ஹக்கீம் பரப்பி வருகிறார்.

மகிந்த, பசில் குடும்பத்தோடு மிக நெருக்கமானவன், ஆனாலும் இந்தத் தேர்தல் விடயத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது.

முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் யாருடைய முகவராகவும் தேர்தல் களத்தில் இயங்கவில்லை.”  என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

Related posts

Sri Lanka condoles with Canada over Quebec terror attack

Mohamed Dilsad

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

Mohamed Dilsad

Six more Russian athletes banned by IOC

Mohamed Dilsad

Leave a Comment