Trending News

சர்வதேச சிறுவர் தினம் இன்று

(UTVNEWS|COLOMBO) – சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகின்றது.‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இதேபோல், இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது. ‘முதியோர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் நாளை எனும் தொனிப்பொருளில் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்கள் ஆகிய வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அறிவும், ஆற்றலும் ஒழுக்கமுமிக்க எதிர்கால சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கத்தக்க வல்லமைமிக்க பயனுள்ள சிறுவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆகையால் அரசாங்கம் என்ற வகையிலும் வளர்ந்தவர்கள் என்ற வகையிலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான உகந்த சமூக சூழலை உறுதிப்படுத்தும் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேடமானதோர் அம்சமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில், வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே, சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வுக் காலத்தைக் கழிக்கும் முதுமைப் பருவமும் ஒன்று போல் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரு வாழ்க்கைப் பருவங்களாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

Hindu devotees celebrate ‘Maha Shivratri’

Mohamed Dilsad

Customs Officials Attacked by Kuwaiti Couple at BIA

Mohamed Dilsad

ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලෙන්, ශ්‍රී ලංකාව ට අලුත් පත් කිරීමක්

Editor O

Leave a Comment